நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இலங்கை வாழ் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.
அதற்கமைய இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த உதவி சமகாலத்தில் நமது நாட்டு மக்களின் இக்கட்டான சூழ்நிலைக்கு கை கொடுத்துள்ளதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.
அதேநேரத்தில் இது தொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு இ.தொ.கா நன்றியும் தெரிவித்துள்ளது என தெரிவித்துள்ளஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை நாட்டு மக்கள் தொடர்பாகவும் நமது மலையக மக்கள் தொடர்பாகவும் இந்திய அரசிடம் அத்தியாவசிய உணவு வழங்குவது தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
அதற்கமைய இந்திய அரசாங்கத்திடம் இருந்து அத்தியவசிய உணவு பொருட்களை பெற்றுத்தருவதற்கு இ.தொ.கா நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.