நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த சுசில் பிரேமஜயந்தவுக்கும், ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில் பிரேம ஜயந்த பங்கேற்ற போதிலும் அதன் பின்னர் நடைபெற்ற சந்திப்புகளில் அவர் பங்கேற்கவில்லை . இந்நிலையிலேயே அவரை வளைத்துபோடும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது என கூறப்படுகின்றது.
சுசில் பிரேமஜயந்த பச்சைக்கொடி காட்டினால், திர்வரும் 18 ஆம் திகதி பதவியேற்க உள்ள அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் செயற்பாடுகளை விமர்சித்ததால், இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
