கடந்த 24 மணித்தியாலங்களில் விபத்தில் 13 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்கள் காரணமாக 13 வயது சிறுவன் உட்பட ஏழு (07) மரணங்கள் பதிவாகியுள்ளன.

இரத்தினபுரி – எல்பிட்டிய வீதியில் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் எல்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் கொடகவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். லொறியின் சாரதி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை ஹொரணை – தல்கஹவில வீதியில் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் பத்தரமுல்லைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவu; சறுக்கி கீழே விழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பலத்த காயங்களுடன் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – கண்டி வீதியில் பங்களாவத்தை பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதி விளக்கின் மீது மோதி கடவத்தையில் வசிக்கும் 40 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளார். ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

வெல்லவ பொலிஸ் பிரிவில் லொறியொன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். விபத்தின் போது பெண் ஒருவரும் குழந்தையும் பயணித்த முச்சக்கர வண்டியின் மீது லொறி மோதியுள்ளது. முச்சக்கரவண்டியின் சாரதியான 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதுடன்இ பெண் மற்றும் குழந்தை படுகாயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தனகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டை இழந்து வீதி விளக்கின் மீது மோதியதில் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இரண்டு குழந்தைகளுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் ஒருவர் பாதசாரி கடவைக்கு அருகில் கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபரும் இரண்டு குழந்தைகளும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்தவரும் அவரது மற்றைய 14 வயது குழந்தையும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மெல்சிறிபுர பகுதியில் டிப்பர் ரக வாகனமும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 38 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தின் போது லொறியின் சாரதி இரண்டு குழந்தைகளுடன் பயணித்துள்ளார். காயமடைந்த மூவரும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், லொறியின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles