குளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிள், இருவர் மருத்துவமனையில், இருவர் பலி

தம்புள்ளை வேமடில்ல பிரதேசத்தில் குளத்தில் வீழுந்து பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று (16) இரவு 10 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹாவத்த பகுதியைச் சேர்ந்த பிசுல் ஹபீக் ஹம்னிதாஸ் (வயது 16) மற்றும் நவ்சாத் அலி முசாபிக் (வயது 16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

 

 

Related Articles

Latest Articles