20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

20 ஐ அகற்றிக்கொண்டு 19 இன் அம்சங்களை உள்வாங்கி 21 ஆம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார்.

இந்நிலையில் 20ஆம் திருத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அதீத அதிகாரங்களை கொடுத்து, அதை நியாயப்படுத்தியும் பேசிய எம்பீகள், அதே கைகளை உயர்த்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது.

இவ்வளவு சீக்கிரம் கோட்டாபய ராஜபக்சவின் சர்வதிகாரம் வீழும் என இவர்கள் கற்பனையிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இதை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றும் யோசனையும் தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு கூறினார். எனினும் முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அகற்றப்பட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திட வேண்டிவரும் என்பதால், அதற்கு நாடு இன்றைய சூழலில் தயார் இல்லை என்பதால், முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்சமயம் அகற்ற பெரும்பாலான கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றப்பட்டால், விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்த மாகாணசபைகள் ஆகியவற்றையும் அகற்ற வேண்டி வரும் என சில ஆளும்கட்சி பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள். இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்புடைய நிலைப்பாடுகள் இல்லை. தமது நிலைப்பாடும் இதுவே என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரிசாத் பதுர்தீன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் என்னிடம் தெரிவித்தார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles