ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் 11 ஆவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
இந்தப் போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் போராட்டம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகின்றது.
மேலும் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாட்டின் பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது