ரம்புக்கனை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் கடும் சர்ச்சை! சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!

ரம்புக்கனையில் மக்கள் போராட்டம்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் சபையில் இன்று கடும் கண்டனம் தெரிவித்தன.

இது தொடர்பில் சபையில் எதிரணி உறுப்பினர்கள் கருத்துகளையும் முன்வைத்தனர்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் கட்சித் தலைவர்களை கூட்டத்தை நடத்திய பின்னர், சபை நடவடிக்கையை முன்னெடுக்கலாம் என ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்று சபையில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.

Related Articles

Latest Articles