இலங்கையில் உணவு பஞ்சம் – நேற்றும் 18 பேர் தமிழகத்தில் தஞ்சம்

மன்னார் கடற்பகுதி ஊடாக தமிழகம் இராமேஸ்வரம் பகுதிக்கு நேற்று வியாழக்கிழமை 18 பேர் அகதிகளாக சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை பகுதியில் இருந்து கடல் வழியாக இராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

அதேவேளை மன்னாரை சேர்ந்த நான்கு மாத கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மூன்று குடும்பங்களை சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் , உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கான தட்டுப்பாடு காரணமாகவும் இலங்கையில் தம்மால் வாழ முடியாத நிலையிலையே இந்தியாவிற்கு வந்துள்ளதாக விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்னர்.

நேற்றைய தினம் சென்ற 18 பேரையும் விசாரணைகளுக்கு உட்படுத்திய பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை மண்டபம் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையில் வாழ முடியவில்லை என கூறி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் 60 பேர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக சென்று தஞ்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles