” நான் பதவி விலகமாட்டேன். இடைக்கால அரசு அமைக்கப்பட்டால், அதிலும் நானே பிரதமர் பதவியை வகிப்பேன். காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பேச்சுக்கு வரவேண்டும்.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
” வரலாறு தெரியாத சிலர்தான் என்னை பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றனர். அவ்வாறு நான் பதவி விலகமாட்டேன். இடைக்கால அரசு அமைந்தால்கூட அது எனது தலைமையில்தான் அமைய வேண்டும்.
“நான் நலமாகவே இருக்கின்றேன். நோயாளியை பார்வையிடக்கூட வைத்தியசாலைக்கு செல்லவில்லை.” -என்றும் மஹிந்த குறிப்பிட்டார்.










