பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில், ” நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நீங்கள் தோல்வி அடைந்தால், அதை ஏறுக்கொள்வீர்களா? அப்போது அடுத்த கட்ட திட்டம் என்னவாக இருக்கும்?” என எழுப்பட்ட கேள்விக்கு சஜித் வழங்கிய பதில் வருமாறு,
” முதலில், நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் வெல்வோம், தொடர்வோம் என்று நினைக்கிறோம். ஒரு பேச்சுக்காக, எங்களுக்கு எண்ணிக்கை கிடைக்கவில்லையென்றால், அதை தோல்வி என்று எப்படி சொல்ல முடியும்? சுயநலம் மிக்க, நாட்டை சூறையாடிய ஒரு அரசியல் தலைமையை இன்னும் ஆதரிக்கும் உறுப்பினர்களுடைய தோல்வி. நீங்கள் சொல்வது போல நாங்கள் வெல்லாவிட்டால், அது எங்கள் தோல்வியல்ல, அது மக்கள் மனநிலையோடு ஒத்துப் போகும் முடிவினை எடுக்கும் தைரியமற்ற மற்ற நாடளுமன்ற உறுப்பினர்களுடைய தோல்வி.
காலி முகத் திடலில் இருக்கும் இளைஞர்களும், பொது சமூகமும், பெரும்பான்மையான குடிமக்கள், மாற்றத்திற்காக ஏங்குகிறார்கள், பதற்றத்துடன் காத்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும். ‘இந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து ஆதரித்தால், அடுத்த தேர்தலில் போட்டியிடாதீர்கள்’ என்ற வாசகம் இப்போது சொல்லப்படுகிறது. இலங்கையில் மக்கள் அதிகாரமே கோலோச்சுகிறது, மக்கள் அதிகாரமே இலங்கையில் தலையெழுத்தை முடிவு செய்யும்.” – என்றார்.