‘வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட இல்லை

நாட்டில் தற்போதுள்ள வௌிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று (04) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இரண்டு வருடங்களிலேனும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என தாம் நினைக்கவில்லை எனவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் 7 பில்லியன் வெளிநாட்டு நாணய கையிருப்பு இருந்த போதும், வரியின் பெறுமதி அதிகரித்து சென்ற காலப்பகுதியில் வரியைக் குறைத்து வரலாற்றுத் தவறை செய்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், கடந்த இரண்டு வருடங்களில் 8 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நாடு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என குறிப்பிட்ட நிதி அமைச்சர், ரூபாவை இதற்கு முன்னரே படிப்படியாக நெகிழ்வுப்போக்குடன் விட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இரண்டு, அல்லது மூன்று வருடங்களினுள் மேற்கொண்ட சில பிழையான தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உதவியுள்ளதாகவும் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பி, வௌிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அலி சப்ரி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles