ரணிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

 முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தி, அது சம்பந்தமாக பாதுகாப்பு தரப்புகளுடன் கலந்துரையாடி, உரிய ஏற்பாடுகளை செய்யவும்.”
இவ்வாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது ஆளுங்கட்சி.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
” எனது வீட்டை சுற்றிவளைக்குமாறு அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கு அணிதிரளுமாறும் கோரப்பட்டுள்து. இதன் பின்னணியில் செயற்படுபவர்களில் சாணக்கியனும் ஒருவர்.
போராட்டங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை சவாலுக்குட்படுத்தி, இவ்வாறு செய்ய கூடாது. அது தவறான முன்னுதாரணமாகும்.” என சுட்டிக்காட்டினார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட தினேஷ் குணவர்தன,
” நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னாள் பிரதமர் தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சபைக்கு தெரியப்படுத்தினார். எனவே, இது தொடர்பில் அவதானம் செலுத்தி, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles