அரசுக்கு ரணில் சிவப்பு எச்சரிக்கை

” அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி கோட்டா கோகம போராட்டத்தை சீர்குலைக்க முற்பட்டால், அனைத்து கலந்துரையாடல்களிலிருந்தும் விலகுவேன். நெருக்கடியைத் தீர்ப்பதில் அரசுக்கு உதவுவதை நிறுத்துவேன்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போதே, ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles