காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஆளுங்கட்சி ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு மக்கள் அரசிடம், கோரிக்கை விடுத்துள்ள வேளையில் அரசு வன்முறையை கையில் எடுப்பது வேதனையளிக்கின்றது எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
