போராட்டத்துக்கு மத்தியில ஆளுங்கட்சி எம்.பி. உயிரிழப்பு

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள, உயிரிழந்துள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போதே அவர் உயிரிழந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

அமரகீர்த்தி அதுகோரள எம்.பியும், அவரின் பாதுகாவலர்களும் நகரில் ஓடுவதுபோல காணொளி வெளியாகியுள்ளது .

எனினும், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

Related Articles

Latest Articles