ரணில் அரசின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு – மைத்திரி!

அரசால் முன்னெடுக்கப்படும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு வெளியில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்துடன், அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீள ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னரே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

அத்துடன், அமைச்சு பதவிகளை தமது கட்சி உறுப்பினர்கள் பெறமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

Related Articles

Latest Articles