பிரதி சபாநாயகர் பதவிக்கு, பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த நியமனம் இடம்பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
