புதிய அரசில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்களிப்பை கோரி, பிரதமர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை ஸ்திரப்படுத்தும் முயற்சியில் தம்முடன் இணைந்து பணியாற்றுமாறும் அவர் கடிதத்தின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிய அரசில் எவ்வித அமைச்சு பதவியும் ஏற்கப்படமாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே இக்கடிதம் அனுப்பட்டுள்ளது.
