புதிய எம்.பி. பதவிப்பிரமாணம்!

பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டாா்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியபோதே அவர் உறுதியுரை ஏற்றார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவை அடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார்.

மொட்டு கட்சியின் விருப்பு வாக்கு பட்டியலில் அமரகீர்த்திக்கு, அடுத்த இடத்தை இவர் பிடித்திருந்தார்.

Related Articles

Latest Articles