பாடசாலைகளுக்கு மே 20 ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மே 20 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவுற்றதையடுத்து, ஜூன் 6 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (20) நிறைவடைகின்றது.

இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

பரீட்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles