மஸ்கெலியாவில், கடந்த மூன்று தினங்களாக கோதுமைமாவை பெற்றுக்கொள்ள முடியாமல் நுகர்வோர் அவதிப்படுவதைக் காண முடிகின்றது.
பெருந்தொகை கோதுமை மாவை, ஒரே ஒரு குறிப்பிட்ட கடைக்காரர் மாவு (முகவர்) எனக்கூறிக்கொண்டு குடோனில் பதுக்கி வைத்துள்ளார். விலை ஏற்றத்தின் பின்னர் இந்நபர்,கோதுமைமாவை தாராளமாக ஏனைய கடைகளுக்கு விநியோகிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மூன்று நாட்களாக இவர், மாவை பதுக்கி வைத்ததாலே இந்த அவல நிலை ஏற்பட்டதாகவும் மக்கள் கவலைப்படுகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அன்றாட பொருட்கள் விலை உயர்வால், பல லட்சம் ரூபாவை இவ்வாறான பதுக்கல் வியாபாரிகள் சம்பாதித்துள்ளனர்.
இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டுமென பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.