சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாட்டுக்குப் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக இதனைத் தான் பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகுவதற்கு தான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கும் விடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்புக் கிடைத்தால் நாட்டுக்குப் பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
எவ்வாறாயினும் கட்சியிலிருந்து விலகுவதற்கு தயார் இல்லை என்றார். நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய வங்கிகள் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய நிதி உதவியளித்திருப்பது நல்ல விடயம். புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறப்பாகச் செயற்படுகிறார் எனவும் தெரிவித்தார.