தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கூட விருக்கின்றது. அப்போது நாடாளுமன்றக் குழுவின்தலைவர், பேச்சாளர், கொறடா போன்ற பதவிகளுக்குரியவர்கள் தெரிவுசெய்யப்படுகின்றமையுடன் இருபதாவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.
ஜனநாயகத்திற்கு சாவுமணியடிக்கும் வகையிலான முன்மொழிவுகளைக் கொண்டுள்ள இருபதாவது திருத்தச்சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான இறுக்கமான நடவடிக்கைளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் நாடாளுமன்றக் குழுவிலேயே தீர்க்க மான முடிவுவொன்றை எடுக்கவுள்ளதாக அதன் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
1978ஆம் ஆண்டு அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 19ஆவது திருத் தச்சட்டத்தில் காணப்படுகின்ற ஜனாதிபதிக் குரிய மட்டுப்பாடுகள் மற்றும் சுயாதீன ஆணைக்குழு, நாடாளுமன்றம் தொடர் பான விடயங்களில் மாற்றங்களைச் செய் வதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத் தினை அரசாங்கம் வர்த்தமானியில் அறி வித்தள்ளது.
இந்நிலையில் அச்சட்டமூலம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நிலைப்பாடு மற்றும் அதுதொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
20ஆம் திருத்தச்சட்டமூலமான வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டள்ளது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டிருக் கின்றோம். குறிப்பாக ஜனநாயகத்திற்குசாவுமணி அடிக்கும் வகையிலான விடயங்கள் தொடர்பில் நாம் அதீத கவனம்செலுத்தியுள்ளோம்.
எனவே இந்த விடயத்தினை நாம்பக்குமாக கையாள வேண்டியுள்ளது. ஜன நாயகத்தினை பாதுகாக்கும் அதேநேரம், எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
ஆகவே 20ஆவது திருத்தச்சட்டம்தொடர்பில் எமது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக நாடாளுமன்றக்குழு கூடவுள்ளது. ” – என்றார்.
