கடைசி போட்டியில் இங்கிலாந்தை பந்தாடியது ஆஸி.அணி!

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள நிலையில் கடைசிபோட்டியில் கிடைத்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது.

சவுத்தாம்ப்டன்- ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று   நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனைத் தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் 5விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்து, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

Related Articles

Latest Articles