முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிடம் 5 மணிநேரம் விசாரணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம், சிஐடியினர் இன்று 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

மைனாகோகம மற்றும் கோட்டாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பான சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காகவே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கமைய, இன்று (24) முற்பகல் 10 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகினார். அவரிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு வலியுறுத்தி, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக சிலர் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Related Articles

Latest Articles