நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக தகவல்

நேபாளத்தில் 22 பேருடன் பயணித்த விமானமொன்று காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

நேப்பாளத்தின் Pokhara நகரில் இருந்து ஜோம்ஸம்  நகருக்கு  பயணித்த  விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் நான்கு இந்தியர்கள் மற்றும்  மூன்று ஜப்பானியர்கள் உட்பட  22 பேர் பயணித்துள்ளனர்.

விமானத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles