‘டொலர்களை உள்ளீர்க்க “கோல்டன் பெரடைஸ் விசா” திட்டத்தை அமுல்படுத்துகிறது இலங்கை

நாட்டுக்கு அந்நிய செலவாணியை ஈர்ப்பதற்கான ஓர் வழிமுறையாக வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால விசா வழங்கும் நடைமுறையொன்றை அமுல்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“கோல்டன் பெரடைஸ் விசா” என பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டவர்களுக்கு இணையதளம் மூலம் விசா வழங்கப்படும்.

இதன்படி இலங்கை மத்திய வங்கி அங்கீகரித்துள்ள வர்த்தக வங்கி ஒன்றில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்யும் வெளிநாட்டவர் ஒருவருக்கு பத்து வருட கால இலங்கை வசிப்பிட விசா வழங்கப்படும்.

இந்த வைப்புத் தொகையை பேணும் வெளிநாட்டவர் ஒருவர் அதில் 50 ஆயிரம் டொலர்களை முழு வருடத்தின் பின்னர் மீளப்பெற முடியும்.
எனினும், எஞ்சியுள்ள 50 ஆயிரம் பொலர்களை வைப்புக் கணக்கில்
தொடர்ந்து பேணி வர வேண்டும்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விசா பிரதி லாபங்களைப் பெறமுடியும்.

Related Articles

Latest Articles