தமிழ்நாடு அரசின் உதவியாகக் கிடைக்கும் நிவாரணப் பொருள் களை மக்களுக்கு வழங்குவதில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படும் நிலையில், அந்த நிவாரணப் பொருள்களின் விநியோகத்தை உடன் நிறுத்துமாறு பிரதமர் அலுவலகத்தால் மாவட்டச் செயலகங்களுக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மக்களுக்காகத் தமிழ்நாடு அரசினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிவாரணப் பொருள்களின் விநியோகங்களில் அரச நிர்வாக இயந்திரம் தவிர்ந்த அரசியல்வாதிகள் பங்குகொள்வது எதிர்கால நிவாரண விநியோகங்களில் தாக்கம் செலுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத னால் இதுவரை விநியோகிக்காத நிவா ரண விநியோகங்களை உடன் நிறுத்து மாறு பிரதமர் அலுவலகம் நேற்று அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பிரத்தியேகச் செயலாளர்கள் உட்பட எந்த அரசியல் வாதிகளினதோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளினதோ பங்களிப்பு இன்றி
நிவாரண விநியோகம் சரியாகப் பாதிக் கப்பட்ட மக்களுக்கு மட்டும் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஊடாக பணிப்புரைகளும் அறிவுறுத்தலும் வழங்கப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நிவாரணப் பொருள்களைப் பெறு வோரின் பட்டியல், வழங்கப்படும் பொருள்களின் அளவு போன்றவற்றைத் தீர்மானிப்பதிலும் அரசியல்வாதிக ளினதோ அல்லது அவர்களின் பிரதிநிதி களினதோ பங்களிப்பு இருக்கக் கூடாது
என்றும் அறிவுறுத்தப்படவிருப்பதாகவும் தெரியவந்தது.
இதற்கமைய இன்று நிறுத்தப்படும் நிவாரண விநியோகம், அதற்கான முறைமை ஒழுங்கமைக்கப்பட்ட பின்னர், அதனடிப்படையில் அடுத்த வாரம் முதல்விநியோகிக்கப்படுவதற்கு வழிகாட்டல் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.










