உணவு பஞ்சத்துக்கு தீர்வுகாண விசேட வேலைத்திட்டம்!

நாடு எதிர்கொள்ள நேரும் உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் விசேட திட்டமொன்றை அடுத்த மாதம் வெளியிடப்போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்குமிடையில் நேற்று கொழும்பில் நடைபெற்றுள்ள உத்தியோகபூர்வ சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் உரம் மற்றும் எரிபொருள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 06 மாதங்களுக்குள் தற்போதைய உணவு பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான நேற்றைய (03) சந்திப்பில் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி விமலேந்திர ஷரன் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதி மலின் ஹெர்விக் இருவரும் பங்கேற்றுள்ளனர்.

இச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய உணவு பற்றாக்குறை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது மேற்படி பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ள பிரதமர்,

விவசாயத்துறையானது தற்போது உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டையே எதிர்நோக்கியுள்ளது. எவ்வாறாயினும் எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் தன்னால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகர்பிரதேச விவசாய வேலைத் திட்டம் தொடர்பிலும் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

உணவுப் பற்றாக்குறை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, வேளாண்மைத் துறை அதிகாரிகளால் உணவுப் பாதுகாப்புத் திட்டம் தொகுக்கப்பட்டு வருவதாக பிரதமர் விளக்கினார். இந்த திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது, UNDP இந்த முயற்சிக்கு ஆதரவை வழங்குமென இதன்போது தெரிவிக்கப்பட்டது. சாத்தியமான உணவுப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நகர்ப்புற விவசாய உற்பத்தி முயற்சியையும் பிரதமர் விரிவாக தெளிவுபடுத்தினார்.

உரத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க விவசாய சமூகத்துக்கு உதவும் புதுமையான விவசாய உதவித் திட்டத்தைத் தொகுத்து வருவதாக UNDP இதன்போது விளக்கமளித்தது.

நன்கொடையாளர்கள் நாட்டுக்கு உதவ முன்வந்துள்ளனர் என்பதையும் நகர்ப்புற விவசாயத் திட்டம், மேலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் அதிக நிதியுதவி வழங்கப்படும் என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles