பஸ் சேவைகள் நாளை வழமைபோன்று இடம்பெறும் -இலங்கை போக்குவரத்து சபை

தூர சேவைகள் மற்றும் கிராம மட்டத்திலான பஸ் சேவைகள் நாளை(06) முதல் வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கை போக்குவரத்து சபையிடமுள்ள எரிபொருள் கையிருப்பு, அடுத்த சில நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி A.S.B. வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை(06) முதல் தனியார் பஸ் சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles