ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தமது பதவியை இராஜினமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை இராஜினமா செய்ததாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே, ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தவிர்க்க முடியாத சில விடயங்கள் காரணமாக தாம்மால் கடந்த இரண்டு வாரங்களாக அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தாம் அறிந்தவரை ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தமது பதவியை இராஜினமா செய்யவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சுதேவ ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.










