இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியில் இருந்து நுவரெலியா பிரதேச சபை தலைவரான வேலு யோகராஜ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
காங்கிரஸின் ஒழுக்காற்று நடவடிக்கைக்குழு இன்று கூடியது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒழுக்காற்று நடவடிக்கை குழு கூடுவதற்கு முன்னரே உப தலைவர் பதவியை வேலுயோகராஜ் இராஜினாமா செய்துவிட்டார்.
பிரதேச தலைவர் பதவியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பேன் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கந்தப்பளை காணி ஊழல் விவகாரத்தையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கந்தப்பளை காணி ஊழல் விவகாரத்தை ‘மலையக குருவி’யே முதன் முறையாக அம்பலப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










