ரணில் – கோட்டா உறவு – மைத்திரி வெளியிட்ட தகவல்

” தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அனைவரும்  ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமையும் பட்சத்தில் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் தற்போதைய  பிரதமருக்கிடையில்  சிறந்த தொடர்பாடல் இல்லை எனவும்,  இருவரும் தனித்தனியே சந்திப்புகளை நடத்தி பணிப்புரைகளை விடுத்துவருகின்றனர் எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

” நாட்டு மக்களுக்கோ, சர்வதேச சமூகத்துக்கோ அல்லது சர்வதேச அமைப்புகளுக்கோ தற்போதைய அரசுமீது நம்பிக்கை இல்லை.

எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசை உருவாக்கி, தேர்தலுக்கான கால எல்லை அறிவிக்கப்பட வேண்டும். அப்போது உதவிகள் கிட்டும். பிரச்சினைகளை இலகுவில் தீர்க்கலாம். ” – எனவும் மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்தார்.

Related Articles

Latest Articles