கதிர்காமத்தில் முதன்முறையாக  முருக பெருமானின் அபூர்வ சக்திகளை பிரயோகிக்கும் சத்ரு சம்ஹார ஹோமம்! 

சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீ ஏற்பாட்டில் இந்த வரலாற்று ரீதியான ஹோமம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 

இலங்கை, இந்திய மண்ணிலிருந்து பிரபலமான வேதவிற்பன்னர்கள் நடாத்திய இவ் ஆறு மணி நேர வேள்வியில் கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே நிஷாந்த் குலசேகர கலந்து சிறப்பித்தார். 

திருமூலர் பெருமானின் குருவாணையின் கீழ், போகர் பெருமானின் அருளாசியோடு இது வரை கதிர்காம மண்ணிலே ஒரு வரலாறு காணாத நிகழ்வான முருக பெருமானின் அபூர்வ சக்திகளை பிரயோகிக்கும் அஸ்திர மந்திரங்களான முந்நூறு மந்திரங்களை கொண்டு பிரயோகிக்கும் “சத்ரு சம்ஹார ஹோமம்”  கதிர்காம மண்ணில் தசநாயக்க நிலமே முன்னிலையில் உலக நன்மைக்காக நடைபெற்றது. 

சித்தர்களின் குரல் சமஸ்தான பிரதம சிவாசாரியர் மஹாதேவ ஸ்ரீ வத்சாங்க குருக்கள் தலைமையேற்று இந்த வேள்வியை நிகழ்த்தினார். 

Related Articles

Latest Articles