சைக்கிள் விபத்துகள் அதிகரிப்பு!

நாட்டில் சைக்கிள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சைக்கிள் விபத்துகளும் அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டு 1202 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், 96 சைக்கிள் ஓட்டுநர்கள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக, பலரும் தற்போது சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர்.

எனினும் விபத்துகள் அதிகரித்து வருவதால், சைக்கிள்கள் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதுடன், ஓட்டுநர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Related Articles

Latest Articles