அனைத்து தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமைந்தால் மட்டுமே இலங்கையால் மீண்டெழ முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டா, பிரதமர் ரணில் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் கூறினார்.
அத்துடன், தேர்தலுக்கான கால எல்லை அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தற்போதைய அரசால் நாட்டு பிரச்சினையை தீர்க்க முடியாது என சுதந்திரக்கட்சி பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
