வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விறகு தேடுவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலை மலைக்கு சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் , பிரதேச மக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையிலேயே குறித்த நபர் , தேயிலை மலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சம்பவம் திட்டமிட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கெளசல்யா
