லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவு நிர்வாகத்திற்கு உட்பட்ட நாகசேனை _ லிப்பக்கலை – பிரேமோர் தங்கக்கலை – ஹில்டன்ஹோல் – ஹென்போல்ட் ஆகிய கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான நான்காவது Covid தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று காலை லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்..
22 & 23 ஆம் திகதி களில் லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் காரியாலயத்தில் நடைபெற்ற தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தில் பொது மக்களின் வருகை மிகக் குறைவாக இருந்ததாகவும் அதன் காரணமாகவே இன்றைய தினம் மீண்டும் தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் சுகாதார பரிசோதகர் ஒருவர் தெரிவித்தார். தற்போது சமையல் எரிவாயு மற்றும் எரிபொருட்களை பெற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பதன் காரணமாக தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதற்கான வரிசைகளில் நிற்பதை தவிர்த்து வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.










