பசறை, சுகாதார பிரிவில் 19 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுன் முதலாம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பசறை நகர் பகுதியில் பதினேழு டெங்கு நோயாளர்களும், ஹாட்றுப்ப பகுதியில் இரண்டு நோயாளர்களுமாக மொத்தமாக 19 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
ராமு தனராஜா










