‘தமிழக நிவாரணம்’ – ‘அவசர கடிதம்’ எழுதினார் அரவிந்தகுமார்

பதுளை பிரதேச செயலக  பிரிவில் அனைத்து பெருந்தோட்டப்பிரிவு மக்களுக்கும் இந்திய- தமிழக நிவாரண உதவிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகமைக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிமொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து அக் கடிதத்தில்,

” இந்திய – தமிழகம் நிவாரண உதவியாக அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம், பதுளை மாவட்டத்தின், பிரதேச செயலகங்கள் ஊடாக, பெருந்தோட்டங்களை உள்ளடக்கிய வகையில் சமூர்த்தி  நிவாரண உதவிகள் பெரும் குடும்பங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆனால், பதுளைப் பிரதேச செயலகப் பிரிவில், குறிப்பிட்ட வேலைத்திட்டம் ஒரு சாராருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருகின்றதாக அறிய முடிகின்றது.

பெருந்தோட்டங்களைப் பொறுத்த வரையில், சமூர்த்தி நிவாரண உதவிகள் பெருந் தோட்ட மக்களுக்கு முழுமையாகப் கிடைப்பதில்லை.

பதுளை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளில் தமிழக நிவாரண உதவிகளின் மூலம் அரிசி பங்கீடுகள் இடம்பெறும் போது, பதுளை பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு மட்டும் முறையாக கிடைக்காததன் காரணம் என்னவென அறியதர வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினால், பெருந்தோட்ட மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். அம்மக்கள் தத்தம் வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத, அவலநிலையில் இருந்து வருகின்றனர்.  ஆகவே, இது குறித்து உரிய நடவடிக்கைகளை, உடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles