பாரதியன்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாளை பதுளையில்!

துளை கல்வி வலயத்தில் அமைந்துள்ள பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினர் பாடசாலை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்துள்ள பழைய மாணவர்களுக்கு இடையிலான பாரதியன்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி பாடசாலையின் அதிபர் சொ.திருச்செல்வம் தலைமையில்மே 16,17 ஆம் திகதிகளில் (சனி, ஞாயிறு) பதுளை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நாளை 16ஆம் திகதி காலை 7.00 மணிக்கு பதுளை-பசறை வீதி 2 ஆம் கட்டையில் இருந்து பழைய மாணவர் வாகனப் பேரணி ஆரம்பமாகி பதுளை கிரிக்கெட் மைதானத்தை அடைந்ததும் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் பதுளை கல்வி வலய உயரதிகாரிகளும் , அதிபர்களும், வர்த்தக பிரமுகர்களும், நலன் விரும்பிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

42 அணிகள் பங்குபற்றும் இப்போட்டியில் 40 வயதிற்கும் குறைந்த, 40 வயதிற்கும் மேற்பட்ட என்ற அடிப்படையில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகளுக்கு வெற்றி கோப்பைகள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

பசறை நிருபர்

 

Related Articles

Latest Articles