நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இன்று ஐவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று ஏற்பட்ட மோதலையடுத்து, காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.

காயமடைந்த 35 பேர்வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் எனவும், இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு தரப்பினர் எனவும் தெரியவருகின்றது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையில் நேற்று இடம்பெற்ற மோதலின்போது இருவர் கொல்லப்பட்டனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்: சிறைச்சாலை அதிகாரிகள்மீது தாக்குதல்- எஸ்டிஎப் களமிறக்கம்

 

 

Related Articles

Latest Articles