ஜனாதிபதியிடம் உலக வங்கி பிரதிநிதிகள் வழங்கிய உறுதிமொழி!

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில் அந்த திட்டங்கள் மீள்வடிவமைக்கப்படும் என்று உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் (Faris Hadad-Zervos) தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டிய பிறகு உலக வங்கியின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக சர்வோஸ் குறிப்பிட்டார்.

உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையில் இன்று (29) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய ஜனாதிபதி ள், உலக வங்கி ஒதுக்கும் கடன் உதவிகளை, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

விவசாயம், கால்நடைகள், சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துக்கு பெற்றுக்கொள்ளக்கக்கூடிய வகையில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அந்த கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வீட்டு எரிவாயு மற்றும் உரங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே தீர்மாணித்துள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரி உயர்வு, டீசல், மண்ணெண்ணெய் மானியம் நீக்கம் ஆகியவை கடற்றொழில் உள்ளிட்ட பல தரப்பினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆபத்தில் உள்ள மற்ற குழுக்கள் குறித்தும் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வரும்போது இந்த விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்பட நேரிடும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ கந்தா(Chiyo Kanda),, சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி அசேல திஸாநாயக்க(Asela Dissanayake), பயிற்சி முகாமையாளர் கேபி ஜோர்ஜ் அஃப்ராம்(Gabi George Afram), தனியார் துறை நிபுணர் பீட்டர் மௌஸ்லி(Peter Mousley), நிதி நிபுணர் மிக்கேல் டிக்மன்(Miquel Dijkman), சிரேஷ்ட பொருளாதார நிபுணர் கிஷான் அபேகுணவர்தன(Kishan Abeygunawardana) ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்,

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி, அநுர திஸாநாயக்க, நிதி செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, வெளிவிவகார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹிமாலி போகொடகெதர மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் உப தலைவர் வைத்தியர் சுரந்த பெரேரா ஆகியோரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles