எரிவாயு மற்றும் அடுப்புகளை திருடிய ஜோடி பதுளையில் சிக்கியது

பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் வீடுகள், கடைகளில் திருடப்பட்ட சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி அந்த பொருட்களுடன் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒரு ஜோடியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். பதுளை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸ் தலைமையக அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் தம்பதிகளிடம் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கணிணி துணைக்கருவிகள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் மின்சாதனங்கள் உட்பட சுமார் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பதுளை தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles