ரெட்டா, லஹிரு உள்ளிட்ட மூவருக்கு பிணை

போராட்டத்தின்போது கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்டா எனப்படும் ரதிந்து சேனாரத்ன மற்றும் ரத்கரவ்வே ஜினரதன தேரர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை 500,000 ரூபா சரீரப்பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் தலங்கம மற்றும் கோட்டை பிரதேசங்களில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் பேரில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்ட நிலையில் கடந்த 22 ஆம் திகதி மருதானை பொலிஸில் அவர்கள் சரணடைந்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Related Articles

Latest Articles