தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு உதவ ஜப்பான் மறுத்துவிட்டதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம், பிரதமரின் செயலாளருக்கு எழுத்து மூலம் இன்று (01) அறிவித்துள்ளது.










