நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயம் , வலய மட்ட விளையாட்டு போட்டிகளில் புதிய பல சாதனைகளுடன் – மாகாண மட்டப் போட்டிகளுக்கு தகுதிப்பெற்றுள்ளது.

மாணவர்களின் சாதனைக்கு உந்து சக்தியாக விளங்குகின்ற பாடசாலை அதிபர் திருமதி ஏ.என்.கொட்வின் , உப அதிபர் கே. குமரன் உட்பட ஆசிரியர் குழாம் , விளையாட்டு பயிற்றுவிப்பாளர் வி.கமல்ராஜ் ஆகியோரின் கடின முயற்சியுடன் இச்சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய
1.பதினாறு வயதுக்குட்பட்ட நீளம்பாய்தல் போட்டியில் முதல் இடம் – நிலுக்ஷா
2.பதினெட்டு வயதுக்குட்பட்ட பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் இரண்டாம் இடம் – யுகேந்திரன்
3.பதினாறு வயதுக்குட்பட்ட பிரிவில் உயரம் பாய்தல் போட்டியில் மூன்றாம் இடம் – சுரேஷ்குமார்
4.பதினாறு வயதுக்குட்பட்டபிரிவில் குண்டெறிதல் போட்டியில் முதலாம் இடம் – தர்சிகா
5.பதினெட்டு வயது பிரிவில் முப்பாய்ச்சல் போட்டியில் மூன்றாம் இடம் – ஹரிசாலினி
6.குழுநிலை போட்டியான கிரி்க்கெட்டில் இரண்டாம் இடம்
5. வொலிபோல்(20வயது ) போட்டியில் மூன்றாம் இடம்.
6.பதினாறு வயதுக்குட்பட்ட பிரிவில் முதலாம் இடமும் கிடைக்கப்பெற்றமை சிறப்பம்சமாகும்.
7.பதினெட்டு வயது பிரிவில் நீளம்பாய்தல் போட்டியில் முப்பாய்ச்சல் போட்டியில் தனுசன் மூன்றாம் இடம்.
8.இருபது வயதுக்குட்பட்ட பிரிவில் குண்டெறிதல் போட்டியில் இரண்டாம் இடம்.
9.அதே பிரிவில் நீளம் பாய்தல் மற்றும் உயரம் பாய்தல் போட்டிகளில் ஜெனிபர் மிலோனா மூன்றாம் இடம்.
10.பதினெட்டு வயதுக்குட்பட்ட உயரம் பாய்தலில் சிகானி மூன்றாம் இடம்.
நுவரெலியா நிருபர் – தியாகு










