எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த கலந்துரையாடலில் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் சிலரும் பங்குபற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
