வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் நேற்று முதல் காமாணல்போயிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான பி.விஜயலெச்சுமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அக்கரவத்தை ஆற்றுப்பகுதியில் இருந்து இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் ஹட்டன் நீதவான் பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக வட்டவளை வைத்தியசாலைக்குச் கொண்டு செல்லப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.










