ரணில் – சஜித் சபையில் கடும் சொற்போரில்!

இலங்கையிலுள்ள பலவீனமான எதிர்க்கட்சியே, ஐக்கிய மக்கள் சக்தியாகும் – என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்தார்.

10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், தற்போது மீண்டும் கூடியிருந்தாலும், எதிரணியின் போராட்டம் தொடர்கின்றது. சபைக்குள் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே பிரதமர் ரணில் இவ்வாறு விமர்சித்தார்.

அதிகாரத்தை கைப்பற்றும் தந்திரம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லை எனவும், அவர்களுக்கு பயிற்சியளிக்க தான் தயார் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தும் பதிலடி கொடுத்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியை நாசமாக்கியவரே ரணில் எனவும் விமர்சித்தார்.

Related Articles

Latest Articles